எந்த தேர்தலுக்கும் நாம் தயார் – மஹிந்த

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் விகாரைக்கு நேற்று (27.01) விஜயம் செய்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மகா போதியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி பூஜ்ய பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்தார்.

பின்னர், ருவான்வெளி மகா சாயியை வழிபட்ட திரு.மகிந்த ராஜபக்ச, ருவன்வெளி சைத்தியராமதிகாரி வணக்கத்துக்குரிய ஈதல்வெதுனுவே ஞானதிலக தேரரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர், தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமது கட்சி பலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இம்முறை எதிர் அணி பலமாக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்? இதற்கு உங்கள் கருது என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சிலர் அப்படிச் சொல்கிறார்கள். ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம். ஆனால் நாங்கள் வலிமையானவர்கள் என்று நாட்டில் உள்ள பெரும்பாலானோர் கூறுகின்றனர்” என்று அவர் பதிலளித்துள்ளார்.

 

எந்த தேர்தலுக்கும் நாம் தயார் - மஹிந்த

Social Share

Leave a Reply