இந்தியா, நியூசிலாந்து 20-20 தொடர் சமநிலையில்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (29.01) லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது 20-20 போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. லக்னோ மைதானத்தின் ஆடுகளம் மிகவும் இறுக்கமானது. அதனால் இரு அணிகளும் ஓட்டங்களை பெற தடுமாறின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் மிட்செல் சென்டனர் ஆட்டமிழக்காமல் 19(23) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, யூஷ்வேந்திர சஹால், வொஷிங்டன் சுந்தர், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களை பெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்கமல் 26(31) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் இஷ் சோதி, மைக்கல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த போட்டியின் நாயகனகா சூர்யகுமார் யாதவ் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தியா, நியூசிலாந்து 20-20 தொடர் சமநிலையில்

Social Share

Leave a Reply