வவுனியாவில் வெள்ளம்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியாவில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

மழையின் காரணமாக குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன், விளை நிலங்களும் சேதமாகியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வவுனியா A9 வீதியூடாக, மழை காரணமாக நிரம்பி வழியும் குளமோன்றின் நீர் பாய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அந்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறித்த வீதியின் நிலையை வழமைக்கு திருப்பும் பணியில் பொது மக்களும் சிவில் அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வெள்ள நிலை காரணமாக மக்களின் வழமை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் வெள்ளம்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply