விரைவில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’ .

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாக காத்திருக்கும்
‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெகு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளதுடன், இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த போதிலும், சில காரணங்களால் பிற்போடப்பட்டது.

மேலும், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டறில் போஸ்டரில் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விரைவில் வெளியாகும் 'துருவ நட்சத்திரம்' .
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply