நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயிம்புல பகுதியில் குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான காரொன்றை பரிசோதித்தப்போது காருக்குள் பொலிஸ் சீருடை அணிந்த இருவர் இருந்துள்ளனர்.
அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்ல என்பதை உணர்ந்த நிட்டம்புவ பொலிஸார், போலி சீருடையில் இருந்தவர்கள் உட்பட நால்வரை கைதுசெய்துள்ளனர்.
மேலும் அவர்கள் பயணித்த கார், அவர்கள் வசமிருந்த இரண்டு கைவிலங்குகள் மற்றும் 3 போலி இழக்க தகடுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 26, 27 மற்றும் 42 வயதுடைய நிட்டம்புவ, முல்லேரிய, கிந்தோட்டை மற்றும் எல்லக்கல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களுக்கு இன்று (09.02) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச்செயலை செய்வதற்காக பயணித்தார்களா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.