துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரையில் துருக்கியில் 17,000 இறப்புகளும், சிரியாவில் 3,000க்கும் அதிகமான இறப்புகளும், பதிவாகியுள்ளன.
இதேவேளை, நாட்டில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் மீட்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, உறைவிடம் போன்ற வசதிகளை சரியான முறையில், முழுமையாக ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் அதிக அக்கறைக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
