இலங்கைக்கான கடன் வழங்குநர்கள் வழங்கிய கடன்களை மீள வழங்குவதற்கான அவகாசம் வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் இலங்கைக்கு வழங்கப்பட அனுமதி வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை கடன் வழங்குநர்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்தகைளில் ஈடுபடுவதாகவும், நிதி உத்தரவாதங்களை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தமக்கு கூறியதாகவும் அந்த ஊடகம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
தேவையான உறுதிமொழி வழங்கப்பட்டு, இலங்கை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் கடன் அனுமதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு வழங்கப்படுமென மேலும் அவர் கூறியுள்ளார்.
பரிஸ் கழகம், இந்தியா அரசாங்கம் போன்றவை கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த ஆதரவு வழங்கி வருகின்றன. அத்தோடு 50 சதவீத கடன் வழங்குனரான சீனாவும் கால அவகாசம் வழங்கியுள்ளது. அதேபோன்று ஏனைய கடன் வழங்குநர்களும் இவ்வாறன நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனவும் குறித்த அதிகாரி கருத்து கூறியுள்ளார்.
