விஸ்வரூபம் எடுத்த மும்பை.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி அதிரடி வெற்றியினை பெற்று தங்களுக்கான அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது. தோல்வியடைந்தாலும் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்று வாய்ப்பினை இழக்கவில்லை.

விஸ்வரூபம் எடுத்த மும்பை.

இந்த அதிரடியான வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஓட்ட சராசரி வேகத்தில் முன்னற்றத்தை பெற்றுள்ளதோடு, 12 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களை பெற்றது. எவின் லெவிஸ் 24(19) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் நேதன் கொட்லர் நைல் 4 (4 – 14) , விக்கெட்களையும், ஜிம்மி நீஷாம் 3 (4- 12) ஜஸ்பிரிட் பும்ரா 2 (4-14) விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.


பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் இசன் கிஷன் ஆட்டமிழக்காமல் 50 (25) ஓட்டங்களை பெற்றார்.

நாளையதினம்(06.10) ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைஸ் ஹைட்ராபாட் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுளள்து. சன்ரைஸ் ஹைட்ராபாட் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் இரண்டாம் இடத்தை நோக்கி நகரும் வாய்ப்பு உருவாகலாம்.

விஸ்வரூபம் எடுத்த மும்பை.

Social Share

Leave a Reply