மொனராகலையில் அண்மைக்காலமாக சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகிறது, இந்நிலை தொடர்ந்தால் அது நல்லதொரு விடயம் அல்ல என நாட்டின் முன்னணி புவியியலாளர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.
மொனராகலை பகுதியில் இதுபோன்ற அதிர்வுகள் அதிகம் ஏற்பட்டால் மற்றும் அதிர்வுகளின் ரிக்டர் அளவு அதிகரித்தால் அவதானமாக இருக்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவின் பேராசிரியர் கபில தஹயனகே தெரிவித்துள்ளார்.
“பிப்.10 மற்றும் 11ம் தேதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 3 ஆக இருந்தது. எனவே அது ஆபத்தாக அமையவில்லை,ஆனால் மீண்டும் மீண்டும் அதிர்வுகள் ஏற்பட்டால் மற்றும் அத்தகைய அதிர்வுகளின் அழுத்தம் அதிகரித்தால் அது ஒரு மோசமான விடயமாக மாறும்,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மொனராகலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
