கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சிக்கல்!

நாட்டிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு திணைக்களத்தின் கணினி மென்பொருள் வலையமைப்பு இயங்கு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், அதனை சரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச்சீட்டு பெற விண்ணப்பித்தவர்கள் ஸ்பீட் போஸ்ட் மூலம் தேவையான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சிக்கல்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply