தேர்தல் திணைக்களத்தினால் தேர்தல் வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான பணம் வழங்கப்படாவிட்டால் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படமாட்டாது என அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் தேர்தல் திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளது.
469 மில்லியன் ரூபா பணம் அச்சிடும் பணிகளுக்கு தேவையென கணக்கிடப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நிதியமைச்சினால் தேர்தல் அடிப்படை செலவுகளுக்காக பெப்ரவரி மாதத்துக்கு 770 மில்லியன் ரூபாவுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் 100 மில்லியன் ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் நாளை(14.02) நடைபெறவுள்ள கட்சி செயலாளர்களுடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிஹால் புஞ்சிஹேவா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.