சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீளமைப்புக்கான இணைய வழி, வட்ட மேசை மாநாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி செய்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இந்தியா ஆகியவற்றின் தலைமையில் G20 நாடுகளது பிரதிநிதிகள் மற்றும் சீனா, சவுதி அரேபியா, இந்தியா, அமெரிக்கா அடங்கலாக G 07 நாடுகளது பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதல் சந்திப்பில் நடுத்தர வருமானமுள்ள கடன் சிக்கல்களிலுள்ள நாடுகளான இலங்கை, சுரினேம், எகுவாடர் ஆகிய நாடுகளும் கலந்து கொள்ளவுள்ளன.
G20 நாடுகளது நிதி அதிகாரிகளது கூட்ட தொடர் பெப்ரவரி 23-25 ஆம் திகதிகளிலில் இந்தியா பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக்கான திட்ட முன்மொழிவுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடன் மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ள முக்கிய நாடுகள், மேம்பட்ட பொருளாதாரத்துக்கான பாரம்பரிய கடன் வழங்குபவர்கள் மற்றும் புதிய கடன் வழங்குநர்களான சீனா, சவுதி அரேபியா, இந்தியா மற்றும் தனியார் துறை போன்றவை தற்போதைய குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பில் பேசப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.