வேறு ஒரு தம்பதியரின் இரு பிள்ளைகளை யாசகம் பெற பயன்படுத்திய, யாசகம் பெற்றுவந்த கணவன், மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாசகம் பெறுவதற்காக பிள்ளைகளை யாசகர்களிடம் அனுப்பியதாக கூறப்படும் தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள கணவன், மனைவியான யாசகர்கள் மற்றும் சிறுவர்களின் பெற்றோர், பிள்ளைகள் யாசகம் பெற்று கொடுக்கும் பணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பிள்ளைகளின் தந்தை தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த போது கீழே விழுந்து ஒரு காலை இழந்ததையடுத்து, தொழிலின்மையால் யாசகம் பெற்று வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
10 மற்றும் 8 வயதான வயதுடைய குறித்த சிறுவர்கள் பொலிஸாரின் பொறுப்பில் சிறுவர் இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
