ரக்பி உலகக்கிண்ணம் இலங்கையில்

ரக்பி உலகக்கிண்ண தொடரில் வெற்றி பெறுமணிக்கு வழங்கப்படும் வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு இன்று(18.02) வந்துள்ளது.

Webb Ellis கிண்ணம் என அழைக்கப்படும் இந்தக் கிண்ணம் மக்கள் பார்வைக்காக இலங்கை வந்துள்ளது. உலகக்கிண்ணங்கள் பொதுவாக உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக உலக நாடுகளுக்கு இவ்வாறு வலம் வருவது வழமை.

இந்த வருடம் ஒக்டோபேர் மாதத்தில் பிரான்சில் ரக்பி உலகக்கிண்ணம் நடைபெறவுள்ளது.

இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த கிண்ணம், சினமன் லேக் சைட்டுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு வரவேற்பு நிகழ் இடம்பெற்றது. பிற்பகல் 3 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் மைதானத்தில் சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை இராஜங்க அமைச்சர் ரோஹன திஸ்ஸநாயக்க, விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் மகேசன் உட்பட மேலும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொணடனர்.

ரக்பி சம்மேளனத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள், பாடசலை மற்றும் கழக ரக்பி வீரர்கள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாளை காலை 9 மணி முதல் 5 மணிவரை CR&FC மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

மலை 06 மணிக்கு மொனார்ச் இம்பீரியல் விடுதியில் கொமர்சியால் வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.

ரக்பி உலகக்கிண்ணம் இலங்கையில்
ரக்பி உலகக்கிண்ணம் இலங்கையில்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply