உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை

மகளிர் உலகக்கிண்ண குழுநிலை போட்டிகளில் முக்கிய போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்து அரையிறுதிப் போட்டிக்கான தகுதியிழந்து வெளியேறியுள்ளது.

குழு ஒன்றிலுள்ள இலங்கை அணி 04 புள்ளிகளுடனும், நியூசிலந்து 02 புள்ளிகளுடனும், தென்ஆபிரிக்க 02 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த நிலைகளில் இருந்த நிலையில் அரையிறுத்திப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய நேற்ய போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இலங்கை அணி வெற்றிபெற்றால் நேரடியாகவும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றல் தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஸ் அணிகளின் போட்டியின் அடிப்படையில் நியூசிலாந்து அல்லது தென் ஆபிரிக்க அணி தெரிவாகும் என்ற நிலையில் நேற்றய போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணியின் தலைவி சோப்பி டேவினே முதலில் துடுப்பெடுத்தாடுவதாக தெரிவித்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியின் சுஷி பேட்ஸ் மற்றும் ஆமெலிய கேர் ஆகியோரின் அதிரடி அரைச்சதத்துடனும் இருவரது 113 ஓட்ட இணைப்பாட்டத்துடன் 20 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சுஷி பேட்ஸ் 49 பந்துகளில் 56 ஓட்டங்களையும் ஆமெலிய கேர் 48 பந்துகளில் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அச்சினி குலசூரிய மற்றும் இனோக ரணவீர தலா 01 விக்கெட்டினை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. சாமரி அத்தப்பத்து 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஏனையவர்கள் பிரகாசிக்க தவற இலங்கை அணி 60 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்து 102 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி சார்பில் லெயா டேகுகு மற்றும் ஆமெலிய கேர் தலா 02 விக்கற்றுக்களை வீழ்த்தினர். போட்டியின் நாயகியாக ஆமெலிய கேர் தெரிவுசெய்யப்பட்டார்.

மகளிர் T20 உலகக்கிண்ண போட்டிகளில் இன்றய போட்டியில் குழு இரண்டில் உள்ள இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply