கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் இன்று (24.02) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியமை தொடர்பில், பாலி பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் உட்பட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று நேற்று (23.02) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.