பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார். ஜனாதிபதிக்கும், அமைச்சரவை அமைச்சர்களுக்குமான சந்திப்பில், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் கலந்தாலோசித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்மதம் தெரிவித்துள்ளார்.
பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றுக்கு விலையேற்றுவது தொடர்பிலும், புதிய விலைகள் தொடர்பிலும் அமைச்சரவை உப குழு அமைச்சரவைக்கு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும் உடனடியாக விலையேற்றங்களை அமுல்படுத்தாமல் அமைச்சரவை தாமதம் செய்திருந்தது.
வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இன்று நடைபெற்ற அமைச்சரவை அமைச்சர்களுடனான கூட்டத்தில் விலையேற்றம் தொடர்பில் பேசி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விலையேற்றத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிக விலையேற்றம் இல்லாமல் பாத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
சீமெந்து ஒரு பக்கட் 50 ரூபாவினாலும், பால்மா 1 கிலோகிராம் 200 ரூபாவினாலும், கோதுமை மா 10 ரூபாவினாலும், சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 550 ரூபாவினாலும் அதிகரிக்க அமைச்சரவை உபகுழு பரிந்துரை செய்திருந்தது.