வட மாகாணத்திற்கான புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஜீவன் தியாகராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார். அதனடிப்படையில் ஜனாதிபதியின் செயலாளர் P.B ஜயசுந்தர, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜாவை இராஜினாமா செய்யுமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆளுநர் பதவியினை ஜீவன் தியாகராஜா ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னமும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆளுநராக புதியவர் ஒருவரை பரிந்துரை செய்துள்ளார் எனபதன் மூலம் தற்போதைய ஆளுநர் திருமதி P.S.M சார்ள்ஸ் ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்படவுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.