பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் குறைவடையும் என வர்த்தக சங்கத்தின் செயலாளர் சமிந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நுகர்வோர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மரக்கறிகளை கொள்வனவு செய்வதால், காய்கறிகளின் விலை இவாறு குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.