மேல், சப்ரகமுவ, ஊவா, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஒரு சில இடங்களில் 50 மி.மீ அதிகமான பலத்த மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.