வவுனியாவின் சிரேஷ்ட செய்தியாளர், ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் இன்று(12.04) உடல் நல குறைவினால் காலமாகியுள்ளார்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலங்களில் வவுனியாவிலிருந்து பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் செய்திகளை உலகளாவிய ரீதியில் கொண்டு சென்றவர் மாணிக்கவாசகம்.
பி.பி.சி செய்தி சேவை, ரொய்டேர்ஸ் செய்தி சேவை ஆகிய சர்வதேச ஊடகங்களில் செய்தியாளராக கடமையாற்றிய இவர், வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
கண்டியை பிறப்பிடமாக கொண்ட இவர், வவுனியாவில் நிரந்தமரக வாழ்ந்து வந்த நிலையில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையின் உள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை (13.04) காலை 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பித்து 9 மணிக்கு தட்சனாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.