செர்பியாவின் தலைநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (03.05) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது தந்தையின் துப்பாக்கியை கொண்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய சிறுவனே இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில், பாடசாலை பாதுகாவலர் ஒருவர் மற்றும் எட்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், 6 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.