சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தவர்கள் கைது!

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு குடியேற முயற்சித்தாக சந்தேகிக்கப்படும் 06 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடல் வழியாக செல்ல முயற்சிக்கும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு செய்யப்பட்டவர்கள் மன்னார் எருக்குளம்பிடி பகுதியை சேர்ந்த 02 ஆண்கள், 01பெண் மற்றும் 03 குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களிடமிருந்து படகு ஒன்றும் கைப்பற்றபட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடியேற்றம் சம்பந்தப்பட்ட நாடுகளின் பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொள்ளாது, இவ்வாறு சட்டவிரோதமாக பலர் செல்வதாகவும் கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணிகள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்கடையினர் மேலும் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply