மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06.05) அவ்வப்போது மழை பெய்யும் எனவும் சில இடங்களில் 50 மி.மீ. க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில், குறிப்பாக மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், மேற்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில், 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது ஏற்படும் மின்னல் தாக்கங்களின் அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.