கொரோனா தடுப்பூசிகளை கையாள்வது சுகாதார துறையல்ல.

இலங்கையில் கொரோனா தடுப்பூசிகளை மாவாட்ட ரீதியில் பிரித்து வழங்குவது ஜனாதிபதி தலமையிலான கொவிட் செயலணியே தவிர சுகாதார துறையல்ல என வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றூசிகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்துள்ள மாவட்டங்களில் வவுனியா மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது. வவுனியா மாவட்டத்திற்கான தேவைகள், அவசர நிலைகளை கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை வவுனியா சுகாதார துறையினர் மிகவும் அர்பணிப்போடு செயற்பட்டு மக்களுக்கு வழங்கியுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை கடந்த காலங்களை போன்று சிறப்பான முறையிலும், விரைவாகவும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இந்த தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தில் சுகாதார துறையினரோடு, மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள, உள்ளூராட்சி சபைகள், பொலிஸ், முப்படைகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மிக முக்கியமாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் இதர திணைக்ளங்களை சேர்நதவர்களுக்கும் வவுனியா பிராந்திய சுகாதார பணிமனை சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாகவும் அந்த அதிகாரி வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளார். வவுனியா மாவாட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அர்பணிப்போடு செயற்பட்டு வருகின்றனர். அவர்களது சேவை மிகப்பெரியளவில் பாரட்டப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட சுகாதர துறையின் உயர்வுக்கு மிக உறுதணையாக இருப்பது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை. வைத்தியசாலையின் உயர்வுக்கு மிகப்பெரியளவில் பங்காற்றியவர் தற்போதைய வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் ஆவார். அத்தோடு முன்னாள் வட மாகாண சுகாதார அமைசரசர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களது பங்கும் முக்கியமானது. சமூக சேவையில் ஈடுபடுவோர் மற்றும் அரசியல் பிரமுகர்களது பங்கும் வவுனியா சுகாதார துறையில் மிகவும் முக்கியமானது. இந்த இக்கட்டான காலத்திலும் அவர்களது சேவை தொடர்கிறது. இன்னும் தொடர வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply