தனது குடும்பத்தை சேர்ந்த எவரும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரின் மனைவி ஜலனி பிரேமதாச அரசியலில் ஈடுபட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எனது மனைவி அரசியலில் ஈடுபட உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும் அதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனது மனைவிக்கு அரசியலில் ஈடுபடும் நோக்கமோ, அதற்கான எண்ணமோ இல்லை. மனைவி சமூக செயற்பட்டாளராக மாத்திரம் பணியாற்றுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் ஜலனி பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாக அந்த கட்சியை சேர்ந்த சிலர் குற்றம் சுமத்தியிருந்தனர்.