இலங்கை மற்றும் பப்புவா நியூகினியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற 20-20 உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 38 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் பத்தும் நிசங்க ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும் பெற்றனர். சரித் அசலங்க 2, தனஞ்செய டி சில்வா 5 ஓட்டங்களையும, பானுக்க ராஜபக்ச 5 ஓட்டங்களையும் பெற்றனர்
இலங்கை அணி சார்பாக பத்தும் நிசங்க 76 ஓட்டங்களை பெற்று போர்ம் ஆகியிருப்பது இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை மேலும் பலப்படுத்தும்.
பதிலுக்கு துடுப்பாடிய பப்புவா நியூகினியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிது ஹசரங்க, டுஸ்மாந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், தஸூன் சாணக்க, லஹிரு குமார,மகேஷ் தீக்சன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இலங்கை அணி விளையாடிய இரண்டு பயிற்சிப்போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. முதற் போட்டியில் பங்களாதேஷ் அணியை இலங்கை அணி வெற்றி பெற்றது.
இலங்கை அணி 20-20 உலக கிண்ண தொடருக்கான தெரிவுகாண் போட்டியில் 18 ஆம் திகதி முதற் போட்டியில் நம்பிபியா அணியுடன் விளையாடவுள்ளது. 20 ஆம் திகதி அயர்லாந்து அணியுடனும், நெதர்லாந்து அணியுடன் 22 ஆம் திகதியும் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இந்த அணிகளுடனான குழுவில் முதலிடத்தை இலங்கை பெற்றாலே உலக கிண்ண தொடரில் இலங்கை அணி விளையாடமுடியும்.