‘ஆரம்ப சேவைப் பதவிகளிலுள்ள பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது’ – சஜித் பிரேமதாச

ஆரம்ப சேவைப் பதவிகளிலுள்ள பட்டதாரிகளுக்கு (தொழிலாளர்,பாதுகாப்பாளர்,அலுவலக உதவியாளர், சுகாதார உதவியாளர் போன்ற) ஏற்பட்டுள்ள பாரிய அநீதி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று (06.06) பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இவ்வருடத்தில் 8000 பட்டதாரிகள் ஆசிரியர் பணிக்கு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக பத்திரிகளைகளில் செய்திகள் பிரசுரமாகி இருந்தாலும், இதற்காக அரச பணியில் ஆரம்ப பணி நிலைகளில் பணிபுரிபவர்கள் வாய்ப்பை இழப்பதாகவும், 2019/20 இல் பயிலுநர் பட்டதாரிகளாக சேர்த்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப சேவை பதவிகளில் ஈடுபடுபவர்களுக்கு வெளிவாரிப் பட்டங்களும் உள்வாரி பட்டங்களும் இருந்தாலும் அவர்கள் பணிபுரியும் தரத்தின் அடிப்படையில் பதவி உயர்வு பெற முடியாது எனவும், இது பாரதூரமான மனிதாபிமானப் பிரச்சினை என்பதால் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒரே வருடத்தில், ஒரே பல்கலைக்கழகத்தில்,ஒரே கற்கைகள் பீடத்தில் ஒன்றாக கற்று பட்டம் பெற்றவர்கள் கூட இவ்வாறு உயர் பதவிகளிலும் கீழ்நிலைப் பதவிகளிலும் இருப்பது பாரதூரமான மனிதாபிமானப் பிரச்சினையாகும் எனவும்,இதற்கு மேலதிகமாக,தற்போதைய ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க இந்த ஆரம்ப சேவை பதவிகளில் உள்ள பட்டதாரிகளையும் பயன்படுத்தினால் மிகவும் பொருத்தமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply