கண்டியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து!

கண்டி – கலஹா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகத்தில் உணவு சமைத்துக்கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைக்க முயன்ற 5 ஊழியர்கள் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஐவரும் கலஹா பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், எரிவாயு கசிவு காரணமாக குறித்த விபத்து ஈரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply