வவுனியாவில் விசேட தேவையுடையோருக்கு புதிய முறையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றிருந்தது.
விஸ் அபிலிட்டி என்ற அமைப்பின் ஊடாக விசேட தேவைக்குட்பட்டோருக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பலாபலன்களை அடையும் பொருட்டு அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்தது.
இதன் செயற்பாட்டு காட்சிப்படுத்தல் விஸ் அபிலிட்டி அமைப்பினுடாக வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ஆடல் பாடலினூடாக விசேட தேவைக்குட்பட்டவர்கள் தமது அன்றாட செயற்பாடுகளினூடாக எவ்வாறு சமூகத்தில் ஏற்படும் எதிர்மறை வெளிப்பாடுகளின் கோபத்தை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தி அறிதல் மற்றும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் இந்த செயற்பாடு அமைந்திருந்தது.