மத்தியூஸின் உலகக்கிண்ண கனவு கலைந்தது

உலக கிண்ண தெரிவுகாண் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவு செய்யப்படவில்லை. டெஸ்ட் அணியின் தலைவர் டிமுத் கருணாரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியுடனான தொடரில் இடம்பெற்ற வீரர்களில் அஞ்சலோ மத்தியூஸ் நீக்கப்பட்டு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்டுள்ள அணி நாளை(10.06) சிம்பாவே நோக்கி உலக கிண்ண தெரிவு காண் தொடரில் பங்குபற்ற செல்லவுள்ளது.

இலங்கை அணி ஓமான், ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய அணிகளுடன் விளையாடவுள்ளது. இந்த அணிகளுடன் விளையாடி முதலிடத்தை பெற்றாலே இலங்கை அணி இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளும்.
இலங்கை அணி விபரம்

தஸூன் சாணக்க, குஷல் மென்டிஸ், டிமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, டுஸ்மாந்த சமீர, கஸூன் ராஜித, லஹிருகுமார, மஹீஸ் தீக்ஷண, மதீச பத்திரன, டுஷான் ஹேமந்த

Social Share

Leave a Reply