இலங்கையின் முன்னணி கழகங்கள் மோதிய 20-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றைய தினம்(11.06) மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன் காரணமாக இறுதிப் போட்டி அணிகளான கோல்ட்ஸ் கிரிக்கட் கழகம், NCC அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
SSC மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டியில் கோல்ட்ஸ் அணியின் தலைவர் அகில தனஞ்சய, NCC அணியின் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் கிண்ணத்தை பகிர்ந்து கொண்டனர். இரு அணிகளும் ஐந்து இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர் நாயகன் விருதினை மூர்ஸ் அணியின் லஹிரு சமரகோன் வெற்றி பெற்றார். சிறந்த துடுப்பாட்ட வீரராக உப்புல் தரங்கவும், சிறந்த பந்துவீச்சாளராக லஹிரு மதுஷங்கவும் தெரிவு செய்யப்பட்டனர்.