கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோக தடை!

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (13.06) 20 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கோரக்கபிட்டிய, சித்தமுல்ல, அர்ராவல, ரத்மல்தெனிய, மஹரகம-பிரியந்தல வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மெதேவல வீதி மற்றும் பொகுந்தர வீதி ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணி முதல் அப்பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலன்வத்தை மயான வீதி நீரேற்று நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply