பல இடங்களில் பலத்த மழை மற்றும் மண்சரிவு அபாயம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (14.06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனதினால் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் அலபத, நிவித்திகல, கல்வான, அஹெலியகொட மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகம், கிரியெல்ல, அயகம, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுல்ல ஆகிய இடங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply