இராவணனாக நடிக்க மறுப்பு தெரிவித்த யாஷ் : காரணம் இதுதானா?

கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய் ஆக மிரட்டிய நடிகர் யாஷ் பிரம்மாண்ட திரைப்படத்தில் ராவணனாக நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் யாஷ் கே.ஜி.எஃப் திரைப்படம் மூலமாக அனைவர் மனதிலும் இடம்பிடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் யாஷ், இந்தியில் இராமாயணத்தை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படத்தில் இராவணனாக நடிக்க உள்ளதாக செய்தி பரவியது.

இந்த செய்தி வெளியாகியவுடன் இரசிகர்கள் இந்தப் படத்தில் இராவணனாக நடிக்க வேண்டாம் என யாஷிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இரசிகர்களின் கோரிக்கைக்கு அமைய யாஷ் இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அடுத்ததாக யாஷ் எவ்வாறான கதையை தேர்ந்தெடுக்கப்போகிறார் அவருடைய அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பில் இரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Social Share

Leave a Reply