பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸின் பிரதான தீவில் இன்று (15.06) 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக தலைநகர் மணிலாவில் சில ரயில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் சேத விவரங்களை மதிப்பிடுமாறு நகரத்தின் பொறியியல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

அதேவேளை பிலிப்பைன் அருகில் இருந்த சில மாகாணங்களிலும் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply