திருகோணமலை, கிண்ணியா, ஆலங்கேணியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த 10 ஆம் திகதி எரியூட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்றைய தினம் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மாணவி எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அதே கிராமத்தை சேர்ந்த இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த இரன்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மாணவி இறக்கும் போது 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் என மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன. ஆகவே குறித்த மாணவி வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.