லியோ திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், லியோ திரைப்படத்தின் ‘நா ரெடி’ எனும் முதல் பாடலை நடிகர் விஜயின் பிறந்தநாள் அன்று வெளியிடவுள்ளதாக படக்குழு முன்னதாகவே அறிவித்திருந்தது.
தளபதி விஜய்யின் பிறந்தநாள் நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தற்போது நா ரெடி பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த பாடல் ப்ரோமோ தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.