பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வருகை தரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் ஊடக பிரிவு இன்று(20.06) அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் 09 ஆம் திகதி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் போட்டிகளுக்காக வருகை தரும் பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
முதற் போட்டி 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கொழும்பு S.S.C மைதானத்தில் நடைபெறவுள்ளது.
11 மற்றும் 12 ஆம் திகதிகளில் பயிற்சிப் போட்டி ஒன்றிலும் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
உலக கிண்ண தெரிவுகாண் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி அந்த தொடர் நிறைவு செய்த பின்னர் இந்த தொடரில் விளையாடவுள்ளது. ஜூலை 09 ஆம் திகதி உலக கிண்ண தெரிவுகாண் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
கடந்த வருடமும் இதே தினங்களில் இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி தொடரை சமன் செய்தது.