இருவேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் பலி!

கொஸ்கொட பிரதேசத்தில் இன்று (21.06) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை, ஹோமாகம, மஹா கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம மஹா கட்டுவான பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (20.06) இரவு 8 மணியளவில் அவர் தனது வீட்டின் முன் தொலைபேசி அழைப்பில் உரையாடிக்கொண்டிருந்தபோது, ​​காரில் வந்த சந்தேகநபர் T56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த தகராறே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply