வவுனியா பூந்தோட்டம் பிரதானவீதியில் நேற்று (20.06) இடம்பெற்ற விபத்தில், இருவர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தமது வீடுநோக்கி பயணித்த மோட்டார் வண்டி ஒன்றை, எதிர்புறமாக வந்த மோட்டார் வண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் கணவன்,மனைவி இருவர் காயமுற்றுள்ள நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்ப்படுத்திய இளைஞர் அவர் பயணித்த மோட்டார்சைக்கிளை கைவிட்டு தப்பிஓடியுள்ளார். எனினும் குறித்த பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள் அந்த நபரை பிடித்து நையப்புடைத்ததுடன், பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.