டுபாயில் உள்ள சொக்லேட் தொழிற்சாலை ஒன்றில் தொழில் பெற்று தருவதாகக் கூறி பண மோசடி செய்த பெண்ணொருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (23.06) கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணும் அவரது கணவரும் இணைந்தே இந்த விடயத்தை செய்துள்ளதாக தெரிந்தவந்துள்ளது.
இவரிடம் பணத்தை கொடுத்து சிக்கிக்கொண்ட ஏழு பேரிடம் இருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவர் மஹியங்கனை பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளதுடன், தற்போது பல கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த சந்தேகநபர்கள் இன்று (24.06) மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.