ரஷ்யாவின் இராணுவ தலைமையகத்தை கவிழ்க்க எல்லா வழிகளிலும் முயற்சி செய்வேன் என வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி பிரிகோஜின் சபதம் செய்துள்ளார்.
ரஷ்ய படையினர் வாக்னர் துருப்புகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக பிரிகோஜின் வெளியிட்ட செய்திகளுக்கு பின் இந்த செய்தி வந்துள்ளது.
இந்நிலையில், பிரிகோஜின் புதிதாக வெளியிட்டுள்ள ஆடியோ செய்தியில், தனது வழியில் இருக்கும் அனைத்தையும் அழித்துவிடுவதாகவும், இது இராணுவ சதி அல்ல, நீதிக்கான அணிவகுப்பு எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பை ஆரம்பித்ததில் இருந்து ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்னர் குழுவினர் உக்ரைனில் போராடி வருகின்றனர்.