ரஷ்யா சார்பாக உக்ரைனில் போரிட்டு வரும் வக்னர் குழுவினருக்கும், ரஷ்யாவிற்கும் இடையில் உள்ளக மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.
இதன்படி வாக்னர் குழுவினர் ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டானில் உள்ள ‘முக்கிய பாதுகாப்பு தளங்களை ஆக்கிரமித்துள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாக்னருக்கும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே நேரடி இராணுவ மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் பிரித்தானியா கூறியுள்ளது.
துணை ராணுவப் பிரிவுகள் வோரெனேஜ் பகுதி வழியாக ‘வடக்கே நகர்ந்து நிச்சயமாக மொஸ்கோவிற்கு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளனர் எனவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
‘இது சமீபத்திய காலங்களில் ரஷ்ய அரசுக்கு மிக முக்கியமான சவாலை பிரதிபலிக்கிறதுஇ’ என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.