முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று (29.06) வீதி விபத்தொன்றில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை புத்தளம் முந்தலம பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், தற்போது சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்தார்.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.