இலங்கைக்கு இதுவரையான காலப்பகுதியில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 84,003 எனவும் அவர்களில் பெரும்பாலோர் இந்தியப் பிரஜைகள் எனவும் அதிகாரசபை மேலும் கூறியுள்ளது.
இதேவேளை ரஷ்யா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் மேற்கூறிய காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.