ஹோமாகம பகுதியில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழப்பு!

ஹோமாகம – மகும்புர பகுதியில் ,இன்று (29.06) இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிரே வந்த பயணிகள் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

47 வயதான குறித்த அதிகாரி ஹோமாகம பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply