நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 பேர் வைத்தியசாலையில், அனுதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞர் ஒருவர் இரு கால்களையும் இழந்துள்ளார்.
இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் எட்டுபேர் வைத்தியசாலையில், அனுதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை-மொரவௌ பொலிஸ் பிரிவில் நேற்று (01.07) இவ்விரு விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
இதில் எட்டுபேர் காயமடைந்த நிலையில், மஹதிவுல்வௌ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து – கதிர்காமம் நோக்கி சுற்றுலா சென்ற பேருந்தொன்று வீதியை விட்டு விலகி இன்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளாகியது.
இதில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், அவருடைய இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பத்மநாதன் பரதன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
சாரதியின் கவனயீனத்தால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவங்கள் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.