கொவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தி நிறைவடைந்ததை யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியில் சுகாதார துறையினை சேர்ந்தவர்களும், அவர்களது உதவியாளர்களும் புகைப்படம் எடுத்து கொண்டாடியதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.
முகக்கவசமின்றியும். இடைவெளி இல்லாமலும் நெருக்கமாகவும் நின்றபடி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. புகைப்பபடங்களில் சுகாதர துறையின் முக்கிய அதிகாரிகளும் காணப்படுகின்றனர். நாடே இக்கட்டான சூழ்நிலையில் காணப்படுகிறது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ளது. தொற்றுக்களும் மரணங்களும் அதிகரித்து செல்கின்றன. இந்த நிலையில் இவர்களது செயற்பாடுகள் அதிருப்தி தரக்கூடியதாக அமைந்துள்ளன. மக்களுக்கு அறிவுரைகள் சொல்லி கட்டுப்படுத்த வேண்டிய இவர்களே இவ்வாறு செயற்பட்டால் சாதரண பொதுமக்களை யார் கட்டுப்படுத்துவது? யாழ்ப்பாணத்தில் தொற்று அதிகமாக காணப்படும் நிலையில் இவர்களது செயற்பாடுகள் நிச்சயம் கண்டிக்கத்தக்கது. இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் மூலமாக தொற்று ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுவதனால் இவர்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும்.
அர்பணிப்பான நல்ல சேவைகளை செய்துவிட்டு இவ்வாறான தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் இந்த சேவையினை செய்தவர்களுக்கும், சுகாதார சேவையினருக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது. இவர்களை போன்றவர்கள் இதனை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.