மெனிங் சந்தை பொது தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட சிலர் கைது!

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக மெனிங் சந்தை பொது தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (26.07) காலை பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மெனிங் சந்தையில் அமைந்துள்ள விற்பனை நிலையங்கள் வெளிநபர்களுக்கு வழங்கப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (26.07) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்திருந்தது.

இவ்வாறான போராட்டம் இடையூராக அமையும் என பேலியகொடை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கமைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை உத்தரவை மீறி செயற்பட்ட குற்றத்திலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை உத்தரவை மீறும் பட்சத்தில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 (3) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாகவும், குறித்த உத்தரவை மீறுவது இலங்கை குற்றவியல் சட்டத்தின் 185வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் எனவும் சுட்டிக்காட்டபட்டுள்ளது.

Social Share

Leave a Reply